வனுவாட்டு தீவில் நில அதிர்வு: அவசரகால நிலை பிரகடனம்
பசுபிக் வலயத்திலுள்ள வனுவாட்டு தீவில் நேற்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நில அதிர்வு அனர்த்தத்தினால் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்தும் இடிபாடுகளில் தேடல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
வனுவாட்டுவில் நேற்றைய தினம் 7.3 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு பதிவானதுடன் பல பின் அதிர்வுகளும் பதிவாகியுள்ளன.
இந்த அனர்த்தத்தில் 200 பேர் காயங்களுக்கு உள்ளாகி, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் தூதரகங்கள் உள்ளிட்ட கட்டடங்கள் சேதமடைந்தன.
இதேவேளை அங்கு மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
தேடுதல் மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, ஏழு நாள் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வனுவாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்