கிழக்கு ஆளுனருக்கும் வலயக்கல்வி பணிப்பாளர்களுக்குமிடையில் சந்திப்பு
-கிண்ணியா நிருபர்-
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர். ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் கிழக்கு மாகாண வலயக்கல்வி பணிப்பாளர்களுக்கும் இடையிலான, சந்திப்பொன்று நேற்று செவ்வாய்க்கிழமை திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் கே.குணநாதன், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவற்றுக்கு வழங்கப்படக்கூடிய தீர்வுகள் குறித்து கலந்துரையாடினர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்