
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளின் தகவல்களை பயன்படுத்தி நிதி மோசடி!
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளின் தகவல்களைப் பயன்படுத்தி, மேற்கொள்ளப்படும் வேலைவாய்ப்பு மோசடி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் வேலை வாய்ப்புகளை வழங்குவதாக தெரிவித்து, இவ்வாறான நிதி மோசடிகள் இடம்பெறுவதை கண்டறிந்துள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முகநூல் பக்கத்திலிருந்து, அதிகாரிகளின் புகைப்படங்களை எடுத்து, போலியான வட்ஸ்அப் கணக்குகளை திறந்து நிதி மோசடிகள் இடம்பெறுகின்றது.
எனவே, பொதுமக்களை விழிப்புடன் இருக்குமாறு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், இவ்வாறான மோசடிகள் தொடர்பில் அறியக்கிடைத்தால், 1989 அல்லது 071 759 35 93 என்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு, பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
