
அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமனம் !
அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று புதன்கிழமை நாடாளுமன்ற அமர்வின் போது இதனை அறிவித்தார்
இதேநேரம் அரசாங்க நிதி பற்றிய குழுவின் உறுப்பினர்களின் பெயர்களையும் சபாநாயகர் அறிவித்தார்
கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, நிமல் பலிஹேன, விஜேசிறி பஸ்நாயக்க, திலின சமரகோன் , சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோர் அரசாங்க நிதி பற்றிய குழுவில் பணியாற்ற தெரிவு செய்யப்பட்டனர்.
