
பேருந்தில் பயணித்தவர் வாயில் இருந்து நுரை வெளிவந்து உயிரிழப்பு!
-யாழ் நிருபர்-
தனியார் பேருந்தில் சுழிபுரத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பயணி ஒருவர் வாயிலிருந்து நுரை வெளிவந்த நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார்.
யாழ்.சுழிபுரம் மேற்கு, பகுதியைச் சேர்ந்த இளையதம்பி சிவசுப்பிரமணியம் (வயது 71) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் இன்று திங்கட்கிழமை காலை 10.30 மணி அளவில் 782 வழித்தட பேருந்தில், சுழிபுரத்தில் இருந்து பயணத்தை மேற்கொண்டார்.
இதன்போது அவருக்கு இடைவழியில் வாயில் இருந்து நுரை வெளிவந்தது, பின்னர் தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இருப்பினும் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
மாரடைப்பு காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
