கொள்ளுப்பிட்டியில் அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலம் மீட்பு
கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் உள்ள டி.எஸ்.ஐ கட்டிடத்திற்கு அருகில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் 65 முதல் 70 வயதுக்கு இடைப்பட்டவராகவும், 5 அடி 8 அங்குல உயரம் கொண்டவராகவும் இருக்கலாம் என கருதப்படுகிறது.
சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்