மட்டக்களப்பில் கவிதைகளுடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு – ஏறாவூரில் இஸ்ரேல் நாட்டுக்கு எதிரான கருத்துகள் அடங்கிய கவிதைகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

சம்மாந்துறை பகுதியை சேர்ந்த குறித்த சந்தேக நபர் ரயிலில் கொழும்பு நோக்கி பயணிப்பதற்காக ஏறாவூர் நகருக்குப் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த நபர், சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இதன்போது, இஸ்ரேல் நாட்டுக்கு எதிரான கருத்துக்கள் அடங்கிய கவிதைகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான சந்தேகநபரிடம் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்