
எதிர்வரும் 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு!
எதிர்வரும் 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேலும் அந்த அமைப்பு மெதுவாக உருவாகி, மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 2 நாட்களுக்கு வடக்கே தமிழக கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யக்கூடும்.
மேற்குக் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் மற்றும் மாத்தளை, திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
மேலும், மத்திய, சப்ரகமுவ, மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
