
20 லீற்றர் கசிப்புடன் ஒருவர் கைது
-சம்மாந்துறை நிருபர்-
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனை பல்நோக்கு கூட்டுறவு வீதியில் கசிப்புடன் ஒருவரை நேற்று சனிக்கிழமை இரவு 8 மணியளவில் சம்மாந்துறை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
சம்மாந்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது மறைத்து வைக்கப்பட்டு இருந்த 20 லீற்றர் கசிப்பை கைப்பற்றியதுடன் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.
வீரமுனை 04, சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்மாந்துறை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரத்னமல்லவின் பணிப்புரைக்கமைய, உப பொலிஸ் பரிசோதகர்களான ஜெயஸ்ரீ மற்றும் விஜயஸ்ரீ, விசேட அதிரடிப் படை சார்ஜன் பண்டார, சாரதி குமார ஆகியோரினால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
