
கொண்டாட்ட நிகழ்வொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பலர் உயிரிழப்பு!
தாய்லாந்தில் கொண்டாட்ட நிகழ்வொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில், மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
தாய்லாந்தின் வடபகுதி டக் மாகாணத்தில் உள்ள உம்பாங் மாவட்டத்தில், வருடாந்தம் இடம்பெறும் பண்டிகை நிகழ்வில், பெருமளவான மக்கள் கூடியிருந்த போது, அவ்விடத்தில் வெடிபொருள் வீசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்போது, 48 பேர் காயமடைந்துள்ளனர், இவர்களில் ஆறு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிபொருட்களே, தாக்குதலிற்கு பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
