உழவு வண்டி மோதியதில் ஒருவர் உயிரிழப்பு!

அம்பேவெல கால்நடைப் பண்ணையில் விலங்குகளுக்கு உணவு விநியோகம் செய்து கொண்டிருந்த உழவு வண்டி மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

இவ் விபத்தில் பலத்த காயமடைந்த அவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறிசமன்கம-அம்பேவெல பிரதேசத்தில் வசிக்கும் 55 வயதுடைய பண்ணை பரிசோதகரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சடலம் நுவரெலியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் உழவு வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.