இளைஞனின் உயிரை பறித்த எலிக்காய்ச்சல்!

யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கரவெட்டி  தல்லையம்பலம் பகுதியைச் சேர்ந்த  கிருபாகரன்  கிருசாந்தன் (வயது 23)  என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் சுகயீனமுற்று பருத்தித்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட  நிலையில் ,யாழ் போதனா வைத்திய சாலைக்கு  மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில்  சில தினங்களுக்கு முன் கோமா நிலைக்கு சென்ற குறித்த இளைஞர், நேற்று சனிக்கிழமை இரவு 11:30 மணியளவில்  சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் .