போதைப்பொருளுடன் மூன்று இளைஞர்கள் கைது!

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொலிங்வுட் பிளேஸ் பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், போதைப்பொருளுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சோதனை நடவடிக்கையின் போது, 36 கிராம் கொக்டைன், 203 கிராம் குஷ் போதைப் பொருள், ஒரு கைத்தொலைபேசி , பணம் எண்ணும் இயந்திரம், இரண்டு வங்கி அட்டைகள் மற்றும் ஒரு மின்னணு தராசு என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

தெஹிவளையைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே, இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், அதே பகுதியில், 3.6 கிராம் குஷ் போதைப்பொருளுடன், மட்டக்குளி மற்றும் கொழும்பு 14 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த, 24 மற்றும் 25 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் வெள்ளவத்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.