
சபாநாயகரின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி
சபாநாயகர் அசோக ரன்வலவின் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு இன்றைய தினம் சனிக்கிழமை அறிவித்துள்ளார்.
சபாநாயகர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக அசோக ரன்வெல்ல நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
தமது கல்வித்தகைமைகளை உறுதிப்படுத்தும் வரையில் சபாநாயகர் பதவியில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
