
எலிக்காச்சல் தடுப்பு நடவடிக்கை தீவிரம்
-யாழ் நிருபர்-
தற்போது வடமராட்சி கிழக்கு பகுதிகளில் பரவிவரும் எலிக்காச்சலை தடுக்கும் நோக்குடன் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று எலிக்காச்சல் தடுப்பு விழிப்புணர்வு கருத்துக்களை மக்களுக்கு வழங்குவதுடன் தடுப்பு மருந்தாக டாக்ஸிசைக்ளின் (doxicycline) மருந்து வழங்கப்பட்டு வருகிறது.
ஆம்பன் பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி மருத்துவ கலாநிதி சிவசுதன் தலமையிலான குழுவினரே இவ்வாறு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மைய நாட்களாக வடமராட்சி பகுதியில் சில மரணங்கள், மற்றும் தொற்றுக்கு உள்ளான பலர் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
