
மட்டக்களப்பில் இடம்பெற்ற முன்பள்ளி விளையாட்டு நிகழ்வு
மட்டக்களப்பு காத்தான்குடி லீட்ஸ் கிட்ஸ் கால்டன் முன்பள்ளி பாலர் பாடசாலையின் விளையாட்டு நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
லீட்ஸ் கிட்ஸ் கால்டன் முன்பள்ளி பாலர் பாடசாலையின் தலைவர் பொறியியலாளர் சப்ரி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் மாணவர்களின் விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்று மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன்பிரதம அதிதியால் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
