
டெங்கை கட்டுப்படுத்த புகை விசிறல்
-மூதூர் நிருபர்-
மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள அல்லைநகர் மேற்குப்பகுதியில் டெங்கு தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான புகை விசிறும் நடவடிக்கை இன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
தோப்பூர் – அல்லைநகர் மேற்குப் பகுதியில் அண்மைக்காலமாக டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் புகை விசிறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
டெங்கு பரவும் அபாயமுள்ள வீடுகள், பொது இடங்கள் இனம் காணப்பட்டு புகை விசிறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
