வேலையில்லா பட்டதாரிகள் யாழ்ப்பாணத்தில் போராட்டம்

-யாழ் நிருபர்-

வடமாகாண வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், வடமாகாண வேலையில்லா பட்டதாரிகள் இன்றையதினம் வெள்ளிக்கிழமை காலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக  முன்னெடுத்திருந்தனர்.

பட்டதாரிகளுக்கும் பாராபட்சமின்றி தொழிலை வழங்கு, பட்டதாரிகளின் கனவுகளுக்கு அரசு உயிர் கொடுக்குமா? பல வருட கனவு நிறைவேறுமா ? பட்டம் வீட்டில் பட்டதாரிகள் தெருவில் என்னும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்திய வண்ணம் எதிர்ப்பு போராட்டத்தினை முன்னேடுத்தனர்.

யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இடம்பெற்று வந்த நிலையில் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தமை சுட்டிக்காட்டதக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்