மின்னல் தாக்கி விவசாயி பலி
மாத்தளை – அங்குனகொலபலஸ்ஸ, மெதஆர பிரதேசத்தில் விவசாயி ஒருவர் நேற்று வியாழக்கிழமை மாலை மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அங்குனகொலபலஸ்ஸ பிரதேசத்தில் பெய்த கடும் மழைக்கு மத்தியில் வயலில் பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளித்துக் கொண்டிருந்த விவசாயி மீது மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெதஆர பகுதியைச் சேர்ந்த தயா திலகரத்ன (வயது – 65) என்ற விவசாயி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தங்காலை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்