மட்டக்களப்பு வாழைச்சேனையில் ஒருவர் கொலை
-கிரான் நிருபர்-
மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊர்த்துச்சேனை கிராமத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு ஒருவர் வாளால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாவும் இக்கொலைக்கான காரணம் என்னவென்று இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை சடலம் தற்போது தடயவியல் பொலிஸாரின் விசாரணைகளுக்காக சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்