440 மெற்றிக் டன் அரிசி இந்தியாவிலிருந்து இறக்குமதி

இந்தியாவிலிருந்து கடந்த 9 ஆம் திகதி முதல் இன்றுவரை 440 மெட்ரிக் டன் அரிசி தொகை, தனியார் துறையினால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு சந்தையில் நாட்டரிசி உள்ளிட்ட பலவகையான அரிசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நிவர்த்திப்பதற்காக, அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய, இறக்குமதி அனுமதிப்பத்திரம் இன்றி, அரிசியை இறக்குமதி செய்வதற்கு எதிர்வரும் 20 ஆம் திகதிவரை, தனியார் துறையினருக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

அதேநேரம், அரிசிக்கான அதிகபட்ச விற்பனை விலையை நிர்ணயித்து நுகர்வோர் விவகார அதிகார சபையினால் அதிவிசேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்