வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் பயணி ஒருவரை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கம்பளை பிரதேசத்தை சேர்ந்த 57 வயதான இவர் டுபாயில் உள்ள கட்டிடம் ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்துள்ளாரென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது சந்தேகநபரிடம் இருந்து 40 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விமான நிலையத்தை விட்டு வெளியேறும்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்