அரசாங்க காணியை வழங்க இலஞ்சம் பெற்ற பெண் கைது

கண்டியில் அரசாங்க காணியை பயிர்ச்செய்கைக்கு வழங்குவதாக வாக்குறுதியளித்த நபரிடம் 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா இலஞ்சமாக பெற்ற பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடவத்தை கோனஹேன பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் பேரில், கண்டி போகம்பர விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக உள்ள வாகனத் தரிப்பிடத்தில் இலஞ்சம் பெற்றுக் கொண்டிருந்த போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி மாவட்டத்தின் பத்தஹேவத்த பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கிரிமதியாவத்தை என்ற காணியை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஊடாக பயிர்ச் செய்கைக்காக பெற்றுக் கொள்வதற்கு அரசாங்கத்திற்கு இடைத்தரகராக செயற்படுவதாகக் கூறி பணத்தைப் பெற்றுக்கொண்ட போதே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்