
மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் 8 பேர் பாதிப்பு
-யாழ் நிருபர்-
நாட்டில் இரு நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை இரண்டு குடும்பங்களை சேர்ந்த எட்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என் சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் வேலணை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/14 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் , வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
அதுபோல சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/165 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
