
முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் பெயர் வர்த்தமானியில்
புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் பெயர் தேர்தல் ஆணைக்குழுவினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
மூத்த சட்டத்தரணியும் அரசியல்வாதியுமான முஸ்தபா, விளையாட்டுத்துறை அமைச்சராகவும், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராகவும் முன்னர் கடமையாற்றியவர்.
முஸ்தபா 2004 ஆம் ஆண்டு கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி முதன் முதலாக பாராளுமன்றத்திற்கு தெரிவானார். 2015ஆம் ஆண்டு தேசியப் பட்டியல் மூலம் மீண்டும் நாடாளுமன்றத்துக்குச் சென்றார்.
பொதுத் தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணி மூன்று நாடாளுமன்ற ஆசனங்களையும் இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்களையும் கைப்பற்றியது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

