ஐந்து நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பப் பெண் யாழில் உயிரிழப்பு

-யாழ் நிருபர்-

பருத்தித்துறையில் ஐந்து நாட்கள் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்று செவ்வாய்க் கிழமை உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை ஓடக்கரையைச் சேர்ந்த சுரேஷ் குமார் ரஞ்சிதா (வயது – 33) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த மூன்று தினங்களாக இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து பனடோல் உட்கொண்டுள்ளார். காய்ச்சல் குணமடையாத நிலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் மயங்கியுள்ளார்.

இந்நிலையில் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று செவ்வாய்க் கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்