மட்டக்களப்பில் கேரளா கஞ்சாவுடன் 2 பேர் கைது

-அம்பாறை நிருபர்-

மட்டக்களப்பு – துறைநீலாவணை பகுதியில் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டுள்ளனர்.

மத்தியமுகாம், கிளிநொச்சி பகுதியை சேர்ந்த 43 மற்றும் 39 வயதுடைய இரு சந்தேக நபர்களே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையினரின் விசேட பிரிவினருக்கு இன்று புதன் கிழமை அதிகாலை கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து மாறுவேடத்தில் சென்ற கல்முனை விசேட அதிரடிப்படையினர் துறைநீலாவணை பகுதியில் வைத்து சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் உட்பட ஒரு தொகை கேரளா கஞ்சா கைத்தொலைபேசி, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் யாவும் களுவாஞ்சிக்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

குறித்த கேரளா கஞ்சா கிளிநொச்சி பகுதியில் இருந்து பேரூந்து ஊடாக கடத்தப்பட்டு பின்னர் மோட்டார் சைக்கிள் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றமை தெரிய வந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்