மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஆர்ப்பாட்டம்

சர்வதேச மனித உரிமைகள் தினமாகிய இன்று செவ்வாய்க்கிழமை, மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தது.

சர்வதேச மனித உரிமைகள் தினமாகிய இன்று இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நீதி கோரியும், சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கவும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி அமலநாயகி தெரிவித்தார்.

மட்டக்களப்பு பேருந்து நிலையத்திற்கு அண்மையில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் நினைவுத்தூபியில் இருந்து ஆரம்பமாகிய ஆர்ப்பாட்ட பேரணி,  மட்டக்களப்பு காந்தி பூங்கா வரை சென்றது.

இவ் ஆர்ப்பாட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து சிறிநேசன் மற்றும் வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மார்க்கண்டு  நடராசா,  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்