
காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் உயிரிழப்பு
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்.வரணி பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான கோகிலான் தவராசா (வயது 60) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் தொடர்ந்து மூன்று தினங்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தார்.
காய்ச்சலுக்கு வரணி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார், பின்னர் மூச்சு விட அவருக்கு சிரமம் ஏற்பட்டது, இந்நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவர் மந்திகை வைத்தியசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மயங்கிய நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார், இருப்பினும் இன்று திங்கட்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சடலம் மீதான மரண விசாரணைகளை, திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
