
மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் மடக்கிப் பிடிப்பு
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இருந்து மணல் கடத்தப்படுவதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பரை விசேட அதிரடிப்படையினர் துரத்திச் சென்றனர்.
இதன்போது, குறித்த டிப்பர் கொடிகாமம் ஊடாக மந்துவில் பகுதியால் தப்பிச் சென்று, வீதி முழுவதும் மணலை கொட்டி சென்ற வேளை சாவகச்சேரி – கைதடி வீதியில் வைத்து, டிப்பருடன் சாரதி பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட டிப்பர் சாரதி சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
