நுவரெலியாவில் மாவா போதைப் பொருள் வைத்திருந்தவர் கைது

-நுவரெலியா நிருபர்-

நுவரெலியா உடப்புசல்லாவ பிரதான வீதியில் விக்டோரியா பூங்கா பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக உள்ள கடையொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மாவா போதைப்பொருளை விற்பனை செய்து வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் 4 கிலோ 200 கிராம் மாவா போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சட்ட விரோதமான முறையில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர் நானுஓயா பகுதியை சேர்ந்த 28 வயதுடையவர் எனவும், அவர் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்