இந்தியாவில் வெடிகுண்டு மிரட்டல்: தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலைகள்

இந்தியாவில் டெல்லியில் உள்ள 44 பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மின்னஞ்சல்கள் ஊடாக நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவும் இன்று திங்கட்கிழமை காலையும் இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் அந் நாட்டு பொலிஸார் இன்று காலை பாடசாலைக்கு வந்த மாணவர்களை உடனடியாக அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலதிகமாக தீயணைப்பு வீரர்கள், வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் மற்றும் பொலிஸ் மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்