
பாடசாலை உபகரணங்களுக்கான வரிகளை குறைக்க கோரிக்கை
பாடசாலை உபகரணங்களுக்காக விதிக்கப்பட்டுள்ள வரிகளை குறைக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பாடசாலை உபகரணங்களின் விலை அதிகரிப்பு காரணமாக பாடசாலை மாணவர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் தற்போது பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே அவற்றிற்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளை குறைக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லிங் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
