
மூளாயில் கசிப்புடன் சந்தேக நபர் கைது
-யாழ் நிருபர்-
யாழ் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் – வேரம் பகுதியில் ஒரு போத்தல் கசிப்புடன் சந்தேக நபரான 24 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து குறித்த நபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
