கலை இலக்கியம் மற்றும் ஊடகத்துறைக்கான விருதுகளை பெற்றுக்கொண்ட புதிய அலை கலை வட்டம்
புதிய வானம் மக்கள் நல அறக்கட்டளை மற்றும் கிறின்சேனல் கல்வி நிலையம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த புதிய வானம் விருது வழங்கும் விழா கடந்த ஞாயிறன்று கொரனை ரந்தார மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் கலை இலக்கியம் மற்றும் ஊடகத்துறையை சார்ந்த 50 பேருக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
புதிய அலை கலை வட்டத்தின் நிறுவனர் ராதாமேத்தா தலைவர் ஷண்மு மற்றும் மகளிர் அணி யின் செயலாளர் ஷஹானா மதுசூதன் ஆகியோர் இவ்விருது விழாவில் விருதுகளை பெற்றுக் கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்