
சிவனொளிபாத மலை புனித ஸ்தலத்தை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம்
சிவனொளிபாத மலை யாத்திரை ஆரம்பமாகவுள்ள நிலையில், சிவனொளிபாத மலையின் உச்சியில் உள்ள புனித ஸ்தலத்தை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் இன்று முதல் முன்னெடுக்கப்படுகிறது.
சிவனொளிபாத மலையின் நாயக்க தேரர் பெங்கமுவே ஸ்ரீ தம்மதின்ன தலைமையில் இந்த பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்போது, கடந்த யாத்திரை காலத்தில் யாத்திரிகர்களினால் வீசப்பட்ட கழிவுகள் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சிவனொளிபாத மலையின் யாத்திரை எதிர்வரும் 14 ஆம் திகதியிலிருந்து ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
