
காத்தான்குடி வீதியில் திடீரென தீ பற்றி எரிந்த முச்சக்கரவண்டி
கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதியில் காத்தான்குடி வீதியால் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாகவே தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது உயிர் சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை என்பதுடன் பிரதேசவாசிகளின் துரித முயற்சியால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் காத்தான்குடி பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
