
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு உணவு விற்பனை நிலையங்களில் விசேட சோதனை
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு உணவு விற்பனை நிலையங்களைச் சோதனையிடுவதற்கான விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்போது, உணவு உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களும் விசேட பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
இதேவேளை, பண்டிகை காலத்தை இலக்காகக் கொண்டு நுகர்வோர் விவகார அதிகாரசபையும் நாடளாவிய ரீதியில் விசேட சோதனைகளை ஆரம்பித்துள்ளது.
காலாவதியான மற்றும் தகவல்கள் திரிபுபடுத்தப்பட்ட பொருட்கள் சந்தைக்கு வருவதைத் தடுக்கும் நோக்கில் மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் களஞ்சியசாலைகள் சோதனையிடப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
