நாளை மறுதினம் முதல் வானிலையில் மாற்றம்

நாடளாவிய ரீதியில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை முதல் மழைவீழ்ச்சி அதிகரிக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் தெற்கு அந்தமான் தீவுகளுக்கு அருகில் உருவாகியுள்ள கொந்தளிப்பான தன்மை காரணமாகவே இந்த காலநிலை மாற்றம் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பு பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த காலநிலை மாற்றத்தினால் வடமாகாணமே அதிகளவில் பாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை 75 மில்லிமீற்றர் வரை ஓரளவு பலத்த மழை பெய்யக் கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்