கஞ்சா செடிகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

-பதுளை நிருபர்-

பதுளை கொஸ்லாந்தை பலஹருவ வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மித்தெனிய பகுதியை சேர்ந்த 39 வயதுடைய நபர் ஒருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரவளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போதே 20010 கஞ்சா செடிகளை கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்நிலையில் வெலங்விட்ட வனப்பகுதியில் 1.7 அடி உயரமான 1800 கஞ்சா செடிகளை கைப்பற்றியதாகவும் இருப்பினும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்