மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தின் பின்னர் பொது இடங்களை சுத்தப்படுத்தும் நடவடிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தின் பின்னர் பொது இடங்களில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் மறறும் பொலித்தீன் போன்ற குப்பைகளை அகற்றும் நடவடிக்கை இன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
இதனை தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இளைஞர் விவகார விளையாட்டு துறை அமைச்சு ஒருங்கிணைப்பில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனம் முன்னெடுத்தது.
மட்டக்களப்பு வாவிக்கரை பூங்கா தொடக்கம் கொத்துக்குளம் மாரியம்மன் ஆலய வளாகம் வரை இந்த சுத்தப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.