
மதுபான உற்பத்திக்கும் சேர்ந்து அரிசி உற்பத்தி செய்ய வேண்டும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
மதுபான உற்பத்திக்கு அரிசி பயன்படுத்தப்படுவதாலும் அரிரி தட்டுப்பாடு நிலவுகிறது, ஆனாலும் மதுபான உற்பத்திற்கு அரிசி தேவை என்றால் அதையும் பெற்றுக்கொடுக்க வேண்டியது எமது பொறுப்பு,. ஏனென்றால் மதுபானத்தால் நாட்டிற்கு பெரும் வருமானம் வருகிறது, என கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்
தேசிய வானொலி ஒன்றில் இடம்பெற்ற நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டடில் இவ்வாறு அரிசி தட்டுப்பாடு நிலவும் போது, நீங்கள் மக்களின் உணவுத்தேவைக்கு அரிசியை கொடுப்பீர்களா? அல்லது மதுபான உற்பத்திக்கு அரிசியை கொடுப்பீர்களா? என நிகழ்ச்சியை நெறியாள்கை செய்த ஊடகவியலாளர் கேள்வி எழுப்பிய போது, அதற்கு பதிலளித்த அமைச்சர்,
மதுபான உற்பத்திக்கா அல்லது மக்களுக்கா அரிசி வங்க வேண்டும் என்ற விவாதம் அல்ல இது,. மதுபான உற்பத்திக்கும் அரிசி தேவைப்படுகிறது என்றால் நாங்கள் அதற்கும் சேர்த்து தான் அரிசி உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும், என தெரிவித்தார்.
