காற்றின் தரம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது!

இலங்கையின் பல பகுதிகளில் இன்று சனிக்கிழமை காலை 06.00 மணி நிலவரப்படி காற்றின் தரம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் கூற்றுப்படி, காற்றின் தரக் குறியீடு 34 முதல் 92 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும், கொழும்பு, குருநாகல், கண்டி, நுவரெலியா, எம்பிலிப்பிட்டிய மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் மிதமானதாகவே காணப்படுவதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.