ரேணுக பெரேராவுக்கு பிணை

மாவீரர் தின நினைவேந்தல் குறித்து போலியான தகவல்களைப் பரப்பிய குற்றச்சாட்டில் கைதான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேரா பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அவர், கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.

இதன்போது, அவரை 10 இலட்சம் ரூபாய் வீதம் இரண்டு சரீர பிணைகளில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மாவீரர் தின நினைவேந்தல் குறித்து போலியான தகவல்களைப் பரப்பிய குற்றச்சாட்டில் அவர் இன்று முற்பகல் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளால் நாகஹவெல பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்