
பல கோடி ரூபாய்க்கு ஏலம் போன பிரபல கிரிக்கெட் வீரரின் தொப்பி
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என எல்லோராலும் போற்றப்படும் அவுஸ்திரேலிய வீரர் சேர் டொன் பிராட்மெனின் புகழ்பெற்ற பச்சை நிற தொப்பி தற்போது ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.
குறித்த தொப்பி இந்திய மதிப்பில் ரூ. 2.6 கோடிக்கு ஏலம் போனது.
இந்த தொப்பியை 1947-1948 இல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது பிராட்மென் அணிந்திருந்தார்.
டொன் பிராட்மென் அவுஸ்திரேலியாவுக்காக 1928ஆம் ஆண்டு முதல் 1948ஆம் ஆண்டு வரை 20 ஆண்டுகள் விளையாடினர்.
இதில் 52 டெஸ்ட் போட்டிகள் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிராட்மேன் 2001இல் தனது 92ஆவது வயதில் காலமானார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
