
ஹிருணிக்கா பிரேமச்சந்திர வழக்கிலிருந்து விடுவிப்பு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவை, வழக்கொன்றிலிருந்து விடுவித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தி, அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை நிறைவு செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், அந்தக் குற்றச்சாட்டுக்களில் இருந்து அவரை விடுவிக்க உத்தரவிட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
