வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது அரசின் கொள்கைப் பிரகடனம்

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் வாக்கெடுப்பின்றி நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமை தொடர்பிலான சபை ஒத்திவைப்பு மீதான விவாதமும் இன்று புதன்கிழமை  நடைபெறவுள்ளது.

சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தலைமையில் நேற்று  செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை இது தொடர்பான விவாதம் பெறுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்