பனை மரக்குற்றிகளை கடத்தியவர் கைது

பனை மர குற்றிகளை கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் புதன் கிழமை வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் பனை மரக் குற்றிகளை அனுமதிப்பத்திரம் இன்றி கடத்திச் செல்வதாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், வட்டுக்கோட்டை தபால் நிலையத்திற்கு அருகே வைத்து இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது சந்தேக நபரிடம் இருந்து 5 பனைமரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, சந்தேக நபரை பிணையில் செல்ல நீதிவான் அனுமதித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்