நெற்பயிர்களுக்கு மடிச்சுக்கட்டி நோய் பரவல்: விவசாயிகள் கவலை

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் தற்பொழுது நெற்பயிர்களுக்கு மடிச்சுக்கட்டி நோய் பரவி வருகின்றது.

அண்மையில் நாட்டில் பெய்த கன மழையின் பின்னரே இந் நோய்த் தாக்கம் ஏற்பட்டுள்ளது. கடும் மழை காரணமாக பல இடங்களில் நெல் வயல்கள் அழிந்த நிலையில் வெள்ளத்தில் மூழ்காத சில வயல்களில் நெற்பயிர்களுக்கு மடிச்சுக் கட்டி நோய் பரவி வருகின்றது.

இதனால் விவசாயிகள் பெரிதும் கவலையடைந்துள்ளதுடன் மருந்து விசிறும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்