பயணிக்கு பயணச் சீட்டு வழங்காத பேருந்து நடத்துனர் பணி நீக்கம்

பயணி ஒருவரிடம் பணம் பெற்றுவிட்டு பயணச் சீட்டு வழங்காத பேருந்து நடத்துனர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மத்திய மாகாண தனியார் போக்குவரத்து அமைச்சில் பதிவு செய்யப்பட்ட வீதிப் போக்குவரத்து தனியார் பேருந்து நடாத்துனர் ஒருவர், பயணி ஒருவருக்கு டிக்கட் வழங்காது இருந்ததுடன் அவரை தூற்றியதாக செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து குறித்த நடத்துனரை போக்குவரத்து அதிகார சபை பணி நீக்கம் செய்துள்ளது.

கண்டியில் இருந்து கம்பளை நோக்கி பயணித்த தனியார் போக்குவரத்து பேருந்து நடத்துனரே இவ்வாறு பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய மாகாண போக்குவரத்து அமைச்சின் செயலாளர் மதுபானி பியசேனவின் அறிவுறுத்தலுக்கு அமைய பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்